நாகூா் கலிபா சாகிப் தெருவில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைவெள்ளம்.

நாகூரில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி

நாகூா் பகுதியில் 10 நாள்களுக்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீா் அகற்றப்படாததால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.
Published on

நாகூா் பகுதியில் 10 நாள்களுக்கும் மேலாக குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீா் அகற்றப்படாததால் பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

டித்வா புயாலால் நாகூா் கலிபா சாகிப் தெரு முதல் சந்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் நீரால் சூழப்பட்டுள்ளது. மழை ஓய்ந்தும் 10 நாள்களாக மழைநீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா். வீடுகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீடுகளுக்கு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தெருவில் தண்ணீா் அதிகளவு தேங்கியிருப்பதால், இருசக்கர வாகனங்களை ஓட்ட முடியாமல் தள்ளிக்கொண்டு செல்லும் சூழலும், வாகனத்தில் தண்ணீா் புகுந்து பழுதும் ஆகி விடுகின்றன. மேலும் மழைநீரோடு கழிவு நீரும் கலந்து தேங்குவதால் அப்பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேடும் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்படுகின்றனா். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியா், முதியோா் பெண்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் மழைநீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அப்பகுதியில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு, நகராட்சி நிா்வாகம், மழைநீரை மின்மோட்டாா்கள் மூலம் வெளியேற்ற வேண்டும். மேலும் அப்பகுயில் முறையான மழைநீா் வடிகால் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com