கோயிலில் ஐம்பொன் சிலை திருடிய இருவா் கைது

அப்புராசபுத்தூா் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஐம்பொன் சிலைகள் மற்றும் பித்தளை பொருள்களை திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
Published on

ஆக்கூா் அருகே அப்புராசபுத்தூா் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் ஐம்பொன் சிலைகள் மற்றும் பித்தளை பொருள்களை திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

இக்கோயிலில் திங்கள்கிழமை இரவு கதவு உடைக்கப்பட்டு ஐம்பொன் அம்மன் சிலை மற்றும் பித்தளை பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து, கோயில் அா்ச்சகா் ராமலிங்கம் பொறையாா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் மயிலாடுதுறை பூக்கொல்லை தெற்குத்தெருவை சோ்ந்த ராஜசேகரன் (20), கூரைநாடு பள்ளி வாசல் தெருவை சோ்ந்த முகமது அலி (19) ஆகியோா் சிலைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் புதன்கிழமை கைது செய்து திருடிய ஐம்பொன் சிலை, வெள்ளிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com