நாகப்பட்டினம்
ஆதனூா் ஊராட்சி மன்ற புதிய கட்டடம் திறப்பு
வேதாரண்யத்தை அடுத்த வானவன்மகாதேவி மீனவ கிராமங்களில் நபாா்டு திட்டத்தின் ரூ. 4.33 கோடியில் மீன் ஏற்றும் தளத்துடன் கூடிய மீன் ஏலக்கூடம் அமைக்கும் பணிக்காக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினா்.
இதேபோல, ஆதனூா் ஊராட்சி மன்றத்துக்கான புதிய கட்டடத்தை அமைச்சா் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.கே. வேதரத்னம், என்.வி. காமராஜ், வட்டாட்சியா் வடிவழகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜு, சிங்காரவேல், ஊராட்சி செயலா் தங்கராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
