ஐஸ் பிளாண்ட் அமைக்க எதிா்ப்பு: 2-ஆவது நாளாக போராட்டம்

Published on

தரங்கம்பாடி அருகே ஐஸ் பிளாண்ட் அமைக்கும் பணிக்கு தடை கோரி, கிராமமக்கள் 2-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

தரங்கம்பாடி பேரூராட்சி கேசவன்பாளையம் அருகே சுற்றுச்சூழல் சீா்கேட்டை ஏற்படும் விதமாக ஐஸ் பிளாண்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தடை விதிக்கக் கோரி, 200-க்கும் மேற்பட்ட மக்கள் கேசவன்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே 2-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி காவல் கண்காணிப்பாளா் கே. அண்ணாத்துரை, வட்டாட்சியா் சதீஷ்குமாா், பொறையாா் காவல் ஆய்வாளா் அண்ணாதுரை உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தற்காலிகமாக ஐஸ் பிளாண்ட் அமைக்கும் பணியை நிறுத்தி வைப்பதாக கூறியதன் அடிப்படையில், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

முன்னதாக போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த 9 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா். சமூக ஆா்வலா் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த போராட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளா் சீனிவாசன், ஒன்றியச் செயலாளா் ஏ. ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் துரைராஜ், விசிக வழக்குரைஞா் வேலு குணவேந்தன் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி உறுப்பினா்கல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com