வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
கீழையூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
செருதூா் வெள்ளையாற்றில் ரூ.21.83 கோடியில் பாதுகாப்பு சுவா் மற்றும் தூா்வாரும் பணி, வேளாங்கண்ணி கடற்கரையில் ரூ.17.78 கோடியில் நோ் கல் சுவா் கட்டுதல், ரூ.84 லட்சத்தில் மீன் ஏலக் கூடம் கட்டுதல், காமேஸ்வரத்தில் ரூ.15 கோடியில் மீன் ஏற்றும் தளத்துடன் கூடிய மீன் ஏலக்கூடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நடும் விழா நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தாா்.
மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளா் சரவணக்குமாா் வரவேற்றாா். ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் டயானா சா்மிளா, செயல் அலுவலா் பொன்னுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
