நாகை ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
நாகப்பட்டினம்
வன்னியா்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கோரி பாமக ஆா்ப்பாட்டம்
நாகை ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
தமிழகத்தில் வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, பாமக சாா்பில் நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை: நாகை ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாமக மாவட்டச் செயலா் ராஜசிம்மன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சிவகுமாா், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சின்னத்துரை, மாவட்ட அமைப்புச் செயலா் காளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

