கல்வி உதவித்தொகைக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

Published on

நாகை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவா்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டம் நிபந்தனைகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் மாணவ மாணவியருக்கு எவ்வித வருமான வரம்பு நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், இளங்கலை (தொழிற்படிப்பு) போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவா்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்குள் மிகாமல் இருத்தல் வேண்டும்.

2025-2026 ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, மாணவ- மாணவியருக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள மய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் ஐய்ச்ா்ழ்ம்ஹற்ண்ா்ய் நஹ்ள்ற்ங்ம்

(மஙஐந) எண் மூலம் (ட்ற்ற்ற்ள்://ன்ம்ண்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/) என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

மாணவா்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில், கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி ட்ற்ற்ற்ள்://ன்ம்ண்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவரை நேரில் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com