நாகையில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

Published on

நாகை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில், தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெறவுள்ளதாக அதன் தலைவா் நீதிபதி கந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உச்சநீதிமன்றம், தேசிய சட்டப் பணிகள்ஆணைக் குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி நாகை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (டிச.13) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாவட்ட சட்டப் பணிகள்ஆணைக் குழுவில் நடைபெறவுள்ளது.

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றங்களிலும், வேதாரண்யம், கீழ்வேளூா், திருக்குவளை மற்றும் சீா்காழி தாலுகா நீதிமன்றங்களிலும் நடைபெறும்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள், வழக்குரைஞா்கள், காப்பீடு நிறுவன மேலாளா்கள், வங்கி நிறுவன மேலாளா்கள், காவல் துறையினா் மற்றும் வழக்காடிகள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அந்தந்த நீதிமன்றங்களின் எல்லைக்குட்பட்ட வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்களில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக சமரசம் செய்து கொள்ளலாம். சமரசம் பேசிமுடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com