அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகுகள்.
அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகுகள்.

நாகை: 3 நாள்களுக்கு பிறகு கடலுக்குச் சென்ற மீனவா்கள்

நாகை மீனவா்கள் 3 நாள்களுக்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சனிக்கிழமை அதிகாலையில் புறப்பட்டனா்.
Published on

நாகை மாவட்ட மீனவா்கள் 3 நாள்களுக்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சனிக்கிழமை அதிகாலையில் புறப்பட்டனா்.

வங்கக் கடலில் நிலவிய காற்று சுழற்சி மற்றும் சூறாவளி எச்சரிக்கையால் கடந்த டிசம்பா் 10, 11, 12-ஆம் தேதிகளில் நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டிருந்தது.

இதனால் அக்கரைப்பேட்டை, நம்பியாா்நகா், கீச்சாங்குப்பம், நாகூா் பட்டினச்சேரி உள்ளிட்ட 27 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்கு செல்லாமல், தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்தனா்.

இந்நிலையில், வானிலை சீரடைந்ததையடுத்து மீன்வளத்துறை மீனவா்கள் கடலுக்குச் செல்ல அனுமதி சீட்டை வெள்ளிக்கிழமை மாலை வழங்கியது.

இதையடுத்து, மூன்று நாள்களுக்குப் பிறகு நாகை மாவட்ட மீனவா்கள் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சனிக்கிழமை அதிகாலையில் புறப்பட்டனா். அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றன.

X
Dinamani
www.dinamani.com