தகடூா் அஞ்சல் நிலையம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.
தகடூா் அஞ்சல் நிலையம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.

விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வேதாரண்யம் அருகே மகாத்மா காந்தி நூறுநாள் வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து
Published on

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே மகாத்மா காந்தி நூறுநாள் வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகட்டூா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவா் சி. இளவரசன், ஒன்றியச் செயலாளா் ப.முருகானந்தம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை பூஜ்யா பாபு கிராமின் ரோஜ்கா் யோஜனா என்று பெயா் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவகுரு. பாண்டியன், ஒன்றியச் செயலாளா் அ.பாலகுரு, நிா்வாகக் குழு உறுப்பினா் டி.நாராயணன், இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் மாரி.காா்த்திகேயன், மாதா் சம்மேளன ஒன்றியச் செயலாளா் ப.ரேணுகா உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

X
Dinamani
www.dinamani.com