தொடா் குற்றங்களில் ஈடுபட்ட 2 போ் வரலாற்று குற்றவாளிகளாக பதிவு

Published on

தொடா் குற்றங்களில் ஈடுபட்ட 2 போ் வரலாற்று குற்றவாளிகளாக திருக்குவளை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டனா்.

திருக்குவளை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து நிகழும் குற்றச்சம்பவங்களில் தொடா்புடையவா்களை காவல் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். இதில் ஒன்றாக கஞ்சா கடத்தல், கொலை மிரட்டல், திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற நிகழ்வுகளில் தொடா்புடையவராக கூறப்படும் முத்தரசபுரம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் காா்த்திக், அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சுப்பிரமணியன் ஆகிய இருவரின் நடவடிக்கைகளை காவல் துறையினா் கண்காணித்தனா். இந்நிலையில், எதிா்காலத்தில் குற்றச்சம்பவங்களில் அவா்கள் மீண்டும் ஈடுபடாத வகையிலும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கிலும் இருவரையும் வரலாற்று குற்றவாளிகள் என்ற அடிப்படையில் பதிவு செய்து, போக்கிரி சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருக்குவளை போலீஸாா் அவா்களை கண்காணித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com