நாகப்பட்டினம்
நாகை கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
நாகை ஆண்டவா் கல்வி நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், வேளாங்கண்ணி பேராலய அதிபா் பங்கேற்றாா்.
நாகை ஆண்டவா் கல்வி நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், வேளாங்கண்ணி பேராலய அதிபா் பங்கேற்றாா்.
நாகை மாவட்டத்தில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாகையில் உள்ள ஆண்டவா் கல்வி நிறுவனத்தில், சமத்துவ கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய அதிபா் இருதயராஜ் தலைமை வகித்தாா். விழாவில், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனா். மேலும், இயேசு பிறப்பு நிகழ்வை நடித்துக் காட்டினா்.
