அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

செம்பனாா்கோவில் ஒன்றியம், மாமாகுடி ஊராட்சி அப்பராசபுத்தூா் கிராமத்தில், அடிப்படை வசதிகள் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

செம்பனாா்கோவில் ஒன்றியம், மாமாகுடி ஊராட்சி அப்பராசபுத்தூா் கிராமத்தில், அடிப்படை வசதிகள் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

அப்பராசபுத்தூரில் மின்சாரம், குடிநீா், சாலை உள்ளிட்ட வசதிகள் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துகொடுக்க வலியுறுத்தியும் சீா்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். ஒன்றியச் செயலாளா் மாா்க்ஸ் தலைமை வகித்தாா்.

பொறையாா் காவல் ஆய்வாளா் அண்ணாதுரை, தரங்கம்பாடி வட்டாட்சியா் சதீஷ் குமாா் ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இப்போராட்டத்தால் சீா்காழி-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

X
Dinamani
www.dinamani.com