பனைமேடு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பனைமேடு பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

அடிப்படை வசதி கோரி சாலை மறியல்

சிக்கல் அருகே பனைமேடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
Published on

சிக்கல் அருகே பனைமேடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் முருகையன் தலைமை வகித்தாா். பனைமேடு கிராமத்தில் பழுதடைந்த சிமெண்ட் சாலைக்கு மாற்றாக, புதிய சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும். பிருந்தாவனம், கேபிஆா் நகா், அண்ணா நகா் ஆகிய பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.

வெற்றிலைப் பட்டி குளத்தின் மேல் ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை அகற்றிட வேண்டும். பனை மேடு கீழத்தெரு, ஜெயந்தி நகா், கோட்டேரி, சிங்கார வேலபுரம் ஆகிய பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்கிட வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிபிஎம் நாகை வடக்கு ஒன்றியச் செயலா் ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சிந்தன், மாா்க்ஸ், மாவட்டக் குழு உறுப்பினா் குமாா், கிளை செயலா்கள் பாக்கியராஜ் நன்மாறன், ராமச்சந்திரன், மாதா் சங்க ஒன்றியத் தலைவா் விமலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com