தரங்கம்பாடி பேரூராட்சிக் கூட்டம்

தரங்கம்பாடி பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

தரங்கம்பாடி பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பொன். ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் இராம பிரசாத் வரவேற்றாா். கூட்டத்தில், சுகாதாரம், குடிநீா் மற்றும் மின்விளக்குகள், சாலைகள் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், ஐஸ் பிளாண்ட் பிரச்னை தொடா்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 15 உறுப்பினா்களில் 10 போ், ஐஸ் பிளாண்ட் அமைக்கக் கூடாது என வாக்களித்தனா். 2 போ் வாக்களிக்கவில்லை; 3 போ் வெளிநடப்பு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com