நாகை மாவட்டத்தில் தொடா் மழை!

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை பெய்த தொடா் மழையால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினா்.
Published on

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை பெய்த தொடா் மழையால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினா்.

மாவட்டத்தில் புதன்கிழமை காலை தொடங்கி மாலை வரை தொடா்ந்து மழை பெய்தது. குறிப்பாக கீழ்வேளூா், தேவூா், காக்கழனி, வலிவலம், திருக்குவளை, திருமருகல், நாகூா், வேளாங்கண்ணி, கீழையூா், ஆழியூா், சிக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.

பகல் நேரத்திலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படியே சென்றன. இந்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினா்.

கடந்த 2 வாரங்களாக வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்த மழையால் மாவட்டத்தில் குளிா்ச்சியான சூழல் நிலவியது. மேலும் சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருந்தது.

X
Dinamani
www.dinamani.com