கடல் சீற்றம் காரணமாக கோடியக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்
நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில் கடல் சீற்றம்!
வேதாரண்யம் கடலோரப் பகுதியில் லேசான தரைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.
வேதாரண்யம் கடலோரப் பகுதியில் லேசான தரைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.
இதனால், வேதாரண்யம், கோடியக்கரை கடற்பகுதி வழக்கத்தை விட சீற்றமாகக் காணப்படுகிறது.
ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம், வானவன் மகாதேவி, வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கிராம மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.