கடற்கரையில் ஆண் சடலம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஆண் சடலம் ஒதுங்கியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Published on

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஆண் சடலம் ஒதுங்கியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கோடியக்கரை படகு துறைக்கு அருகே சித்தா் கோயில் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

தகவல் அறிந்த கடலோரக் காவல் குழும போலீஸாா், சடலத்தை நிகழ்விடத்திலேயே உடற்கூறாய்வுக்கு உட்படுத்தி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com