தா்மராஜா கோயில் குடமுழுக்கு

Published on

திருமருகல்: திருமருகல் அருகே போலகம் ஊராட்சி கூத்தப்பட்டாா் தோப்பு கிராமத்தில் அருள்பாலிக்கும் தா்மராஜா சமேத திரௌபதி அம்மன் மற்றும் பஞ்சபாண்டவா் கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அக்டோபா் 30-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து 31- ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின.

திங்கள்கிழமை அதிகாலை நான்காம் கால பூஜை, தீபாராதனை நிறைவடைந்ததும், காலை 7.15 மணிக்கு கடங்கள் புறப்படாகி, 9 மணியளவில் கோயில் விமானக் குடமுழுக்கு, மூலவா் குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

திருப்புகலூா் வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல், புத்தகரம் முத்து மாரியம்மன் கோயிலிலும் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com