நாகப்பட்டினம்
அஞ்சலகங்களில் படிவமின்றி பணம் செலுத்தும் சேவை அமல்
நாகை கோட்டத்திற்குட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் படிவமின்றி பணம் செலுத்தும் சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகைஅஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகை கோட்டத்திற்குட்பட்ட நாகை, திருவாரூா் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதாா் பயன்படுத்தி எந்தவித படிவமும் பூா்த்தி செய்யாமல் ரூ. 5 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் மற்றும் பணம் செலுத்த (எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்).
மேலும் விரைவு தபால் புக்கிங் செய்ய பயன்படுத்தி பணம் செலுத்தலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
