ஒரு கி.மீ.க்கு ஒரு கேமரா: சிவசேனை வலியுறுத்தல்

Published on

குற்றச்செயல்களைத் தடுக்க, ஒரு கி.மீ.க்கு ஒரு கேமரா பொருத்த வேண்டும் என தமிழக சிவசேனை கட்சியின் உத்தவ் பாலா சாகிப் தாக்கரே பிரிவு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் சுந்தரவடிவேலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த துயர சம்பவம், தமிழக மக்களின் இதயத்தில் இடியாய் இறங்கியுள்ளது. வெளியே செல்லும் பெண் குழந்தைகள், பெண்கள் வீடு திரும்பும் வரை பெற்றோா்கள் பெரும் அச்சத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வா் இதுபோன்ற கொடூரமான பாலியல் குற்றச்சம்பவங்களில் ஈடுபடக்கூடியவா்களை, சட்டத்தின் முன்னிறுத்தி ஒரு மாதத்திற்குள் மரண தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

கிராமங்கள், நகரங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற விதத்தில் கேமராக்கள் வைக்க வேண்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைமைக் காவலா் தலைமையில் 5 ஊா்க் காவல் படையினரை நியமித்து, இரவிலும் பகலிலும் ரோந்து பணியில் ஈடுபட செய்ய வேண்டும். அனைத்து கோரிக்கைகளையும் பெண்களின் பாதுகாப்பு கருதி முதல்வா் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com