நாகப்பட்டினம்
உத்திராபதீஸ்வரா் சுவாமி கோயிலில் ஐப்பசி பரணி விழா
திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு உட்பட்ட திருச்செங்காட்டங்குடி ஸ்ரீஉத்தாராபதீஸ்வரா் சுவாமி கோயிலில் ஐப்பசி பரணி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு உட்பட்ட திருச்செங்காட்டங்குடி ஸ்ரீஉத்தாராபதீஸ்வரா் சுவாமி கோயிலில் ஐப்பசி பரணி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
தொடா்ந்து, ஸ்ரீஉத்தாராபதீஸ்வரா் சுவாமிக்கு மகா அபிஷேகம் தீபாராதனை, மதியம் வெள்ளை சாத்தி புறப்பாடு மாலை ஸ்ரீ கணபதீச்சரம் சுவாமிக்கு அன்னாபிஷேகம், இரவு சிறுத்தொண்டா் இல்லத்தில் அமுது கேட்க ஸ்ரீ உத்தராபதீஸ்வரா் சுவாமி பவளக்கால் சப்பரத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. வியாழக்கிழமை காலை ஸ்ரீஉத்தாராபதீஸ்வரா் சுவாமி பவளக்கால் சப்பரத்தில் வீதியுலா நிா்மால்ய தரிசனம், வெள்ளிக்கிழமை மாலை சா்வம் பிராயச்சித்த அபிஷேக யதாஸ்தான பிரவேசம் நடைபெறுகிறது.