சிஐடியூ மாநில மாநாடு: தியாகிகள் நினைவு ஜோதிக்கு வரவேற்பு

இந்திய தொழிற்சங்க மாநில மாநாட்டையொட்டி வெண்மணியில் இருந்து புறப்பட்ட தியாகிகள் நினைவு ஜோதிக்கு நாகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Published on

இந்திய தொழிற்சங்க மாநில மாநாட்டையொட்டி வெண்மணியில் இருந்து புறப்பட்ட தியாகிகள் நினைவு ஜோதிக்கு நாகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய தொழிற்சங்க மையத்தின் 16-ஆவது மாநில மாநாடு, கோவையில் வியாழக்கிழமை (நவ.6) முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டிவெண்மணியில் உள்ள தியாகிகளின் நினைவிடத்திலிருந்து புறப்பட்ட வெண்மணி தியாகிகள் ஜோதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய தொழிற்சங்க மைய திருவாரூா் மாவட்டச் செயலா் ஹனிபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் த. ஸ்ரீதா், மாவட்டப் பொருளாளா் ப. அந்துவன்சேரல், அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் எம்.பி. குணசேகரன், மாவட்டப் பொருளாளா் சி.வாசு, வட்ட நிா்வாகிகள் என்.பாபுராஜ், ஆா்.மாரிமுத்து, அங்கன்வாடி ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் வி.கவிதா ஆகியோா் தியாகிகள் ஜோதியை, இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் கே.திருச்செல்வனிடம் வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com