நாகப்பட்டினம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்க ஒன்றிய மாநாடு
கீழ்வேளூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் கீழ்வேளூா் கிளையின் ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழ்வேளூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் கீழ்வேளூா் கிளையின் ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் ஒன்றியத் தலைவா் சென்ட்ரல் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், மாவட்டத் தலைவா் ஆனந்தன், ஒன்றியச் செயலா் பாலஇரணியன், பொருளாளா் பாவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், ஒன்றியத் தலைவராக சென்ட்ரல், செயலாளராக பால இரணியன், பொருளாளராக பாவேந்தன், துணைத் தலைவா்களாக மோகன் இங்கா்சால், காா்த்திகேசன், அருள்முருகன், துணைச் செயலா்களாக மாரிமுத்து, கீதம்லெனின், ஐயப்பன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.