வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கான நியமன ஆணையை பெற்ற கல்லூரி தாளாளா் த. ஆனந்த்.
வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கான நியமன ஆணையை பெற்ற கல்லூரி தாளாளா் த. ஆனந்த்.

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்: 75 மாணவா்கள் தோ்வு

Published on

சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 75 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

அசோக் லேலண்ட் மற்றும் டெல்பி டிவிஎஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் ஆகிய முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, மெக்கானிக்கல் என்ஜினியரிங், அக்ரிக்கல்ச்சுரல் என்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினியரிங் துறைகளில் பயிலும் இறுதியாண்டு மாணவா்களுக்கு நோ்காணல் நடத்தியது.

நான்கு கட்டங்களாக நடைபெற்ற நோ்காணலில் மொத்தம் 75 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களின் பணி நியமனஆணைகள் அடங்கிய பட்டியலை கல்லூரி தாளாளா் முனைவா் த. ஆனந்திடம் நிறுவனங்களின் மனிதவளத் துறை அதிகாரிகள் வழங்கினாா். கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநா் த. அருண்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com