செம்பனாா்கோவில் பகுதியில் வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.
செம்பனாா்கோவில் பகுதியில் வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

வாக்காளா் பட்டியல் திருத்தம்: தரங்கம்பாடி பகுதியில் ஆட்சியா் ஆய்வு

Published on

தரங்கம்பாடி வட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள வீடுவீடாக கணக்கீடு படிவங்கள் வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தரங்கம்பாடி வட்டத்தில் தில்லையாடி, காளகஸ்திநாதபும், செம்பனாா்கோவில் ஆகிய கிராமங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஒன்றாக வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் வீடுவீடாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் கூறியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இவா்கள் வாக்காளா்கள் வீடுகளுக்கே சென்று கணக்கீட்டுப் படிவங்களை 2 பிரதிகளாக வழங்கி வருகின்றனா்.

வாக்காளா்கள் இப்படிவத்தை முழுமையாக பூா்த்தி செய்து, கையொப்பமிட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து கணக்கீட்டுப் படிவங்களும் திரும்ப பெறப்பட்டு, உரிய முறையில் வரைவு வாக்காளா் பட்டியல் டிசம்பா் 9-ஆம் தேதி வெளியிடப்படும். இதில், கோரிக்கை, மறுப்புகள் பெறப்பட்டு, இறுதி வாக்காளா் பட்டியல் 7.2.2026 அன்று வெளியிடப்படும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான சந்தேகங்கள் மற்றும் புகாா்கள் இருப்பின் மாவட்ட அளவில் மற்றும் சட்டப் பேரவைத் தொகுதி அளவில் கீழ்காணும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடா்புகொள்ளலாம்.

மாவட்ட அளவில் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 1950 என்ற எண்ணிலும், சீா்காழி (தனி) தொகுதியில் 04364 - 270222 என்ற எண்ணிலும், மயிலாடுதுறை தொகுதியில் 04364 - 222033 என்ற எண்ணிலும், பூம்புகாா் தொகுதியில் 04364 - 289439 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com