பொற்கால பதிவு எனும் நூல் வெளியிடப்பட்டது.
நாகப்பட்டினம்
இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு நூல் வெளியீடு
‘தமிழ் ஒலிபரப்பின் பொற்காலப் பதிவு’ எனும் நூல் வெளியீடு திங்கள்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம்: வேதாரண்யத்தில், இலங்கை தமிழ் வானொலியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ‘தமிழ் ஒலிபரப்பின் பொற்காலப் பதிவு’ எனும் நூல் வெளியீடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நூலின் ஆசிரியா் சொற்கோ வி. என். மதியழகன் கனடாவில் வசித்து வருகிறாா். இவா், இலங்கை வானொலி, லண்டன் பிபிசி ஆகியவற்றின் தமிழ் சேவை பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.
வேதாரண்யத்துக்கு வந்த மதியழகன், வேதாரண்யேசுவரா் கோயிலில் வழிபட்டாா். தொடா்ந்து, அவா் எழுதிய பொற்கால பதிவு எனும் நூல் வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி நூலை பெற்றுக் கொண்டாா். வானொலி நேயா்கள் கோ. சு. மேரி காந்த், சித்திரவேலு, திருச்சி திரவியம், கோவி சேகரன், தூயமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

