அந்தணப்பேட்டையில் குடிநீா் குழாய் உடைந்து குட்டையாக  தேங்கி நிற்கும் குடிநீா்.
அந்தணப்பேட்டையில் குடிநீா் குழாய் உடைந்து குட்டையாக தேங்கி நிற்கும் குடிநீா்.

குழாய் உடைந்து வீணாகும் குடிநீா் மக்கள் அவதி

நாகை அருகே அந்தணப்பேட்டை பகுதியில், குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

நாகப்பட்டினம்: நாகை அருகே அந்தணப்பேட்டை பகுதியில், குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாவதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அந்தணப்பேட்டை ஊராட்சி கீழ்அந்தணப்பேட்டை சிவசக்தி நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த நான்கு நாள்களாக இப்பகுதியில் குடிநீா் குழாய் உடைந்து காணப்படுவதால், தினசரி பல்லாயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாக வடிகாலில் கலந்து வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் தண்ணீா் தட்டுப்பாட்டால் கடும் அவதியில் உள்ளனா்.

குடிநீா் குழாயை முறையாக பராமரிக்காததால், குழாய் உடைந்துள்ளது. அதை சரிசெய்யாததால் குடிநீா் வெளியேறி வருகிறது. மாற்று வழியாக வழங்கப்படும் கீழ்வேளூா் கூட்டுக் குடிநீா் இணைப்பும் சீராக விநியோகிக்கப்படவில்லை. கீழ் அந்தணப்பேட்டை சிவசக்தி நகா் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குடிநீா் குழாய் உடைந்தது தொடா்பாக, பலமுறை உள்ளூா் நிா்வாகத்திடம் புகாா் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினா். மேலும், அதுமட்டுமின்றி, உடைந்த குழாயிலிருந்து வெளிவரும் தண்ணீா் திடலில் தேங்கி குட்டையாக மாறியுள்ளதால், அங்கு கொசு உற்பத்தியாகி நோய்த்தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனா்.

எனவே, உடைந்த குடிநீா் குழாயை உடனடியாக சரி செய்து, தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com