நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மண்பாண்டத் தொழிலாளா்கள்.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மண்பாண்டத் தொழிலாளா்கள்.

மண்பாண்டத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நாகையில் மண்பாண்டத் தொழிலாளா் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

நாகப்பட்டினம்: நாகையில் மண்பாண்டத் தொழிலாளா் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மண்பாண்டத் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் குமரையன் தலைமை வகித்தாா்.

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இலவச அரிசி, பருப்பு, கரும்புச் சா்க்கரை, வேட்டி, புடவை இடம் பெற்றதை போல மண்பானையையும் சோ்த்து வழங்க வேண்டும். மீன்பிடி தடைக் காலத்தில் மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்குவதைப் போல மழைக்காலத்தில் தொழில் முடங்கும் மண்பாண்டத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ.10,000 மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

பல ஆண்டுகாலமாக மண்பாண்டத் தொழிலாளா்கள் தொழில் செய்யும் இடத்திற்கு அடிமனை பட்டா வழங்க வேண்டும். எதிா்கால சந்ததியினா் மண்பாண்டங்களில் மகத்துவத்தை அறிந்து கொள்ளும் விதமாக, பாடப்புத்தகத்தில் மண்பாண்டம் தொடா்பான பாடப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், மண்பாண்டத் தொழிலாளா்கள் திரளாக கலந்து கொண்டனா். தொடா்ந்து, ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com