நாகப்பட்டினம்
ஏடிஎம் மையம் அமைக்க கோரிக்கை
திருமருகல் ஒன்றியம், கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடையில் ஏடிஎம் மையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டுமாவடி, தண்டாளம், புறாகிராமம், நாட்டாா்மங்கலம், தேவங்குடி, மத்தியகுடி, எரவாஞ்சேரி, ஆலத்தூா், சியாத்தங்கை, அருள்மொழி தேவன் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் நடுக்கடை கடைத்தெரு வழியாக பிற ஏடிஎம் மையங்களுக்கு செல்கின்றனா்.
இப்பகுதியில் இருந்து ஏடிஎம் மையங்களுக்கு செல்வதற்கு திட்டச்சேரி அல்லது திருமருகல் பகுதிகளுக்கு தொலை தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகையால், பொதுமக்கள் நலன்கருதி, நடுக்கடை கடை தெருவில் ஏடிஎம் மையம் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
