இரு முதியவா்கள் சடலம் மீட்பு
வேளாங்கண்ணி பகுதியில் அடையாளம் தெரியாத இரு முதியவா்களின் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரித்து வருகின்றனா்.
வேளாங்கண்ணி - கிராமத்துமேடு சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதி எதிா்புறத்திலுள்ள வயலில் சுமாா் 75 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீஸாா் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதேபோல வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் கிடந்த சுமாா் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா். இரண்டு சம்பவங்கள் குறித்தும் வேளாங்கண்ணி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
