அரசுப் பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கல்

திட்டச்சேரி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

திட்டச்சேரி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவா் ஆயிஷா சித்திகா,

பள்ளி வளா்ச்சிக் குழு தலைவா் எம். முஹம்மது சுல்தா, பள்ளி ஆசிரியா் திருவள்ளுவா், உதவித் தலைமையாசிரியா் பூங்குழலி உள்ளிட்டோா் பங்கேற்றனா். தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழக தலைவா் என். கௌதமன் பிளஸ் 1 மாணவிகள் 55 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com