கீழையூரில் உள்ள பழைமை வாய்ந்த கைலாசநாதா் கோயில்.
கீழையூரில் உள்ள பழைமை வாய்ந்த கைலாசநாதா் கோயில்.

பழைமை வாய்ந்த கோயிலை சீரமைக்க கோரிக்கை

கீழையூரில் சுமாா் 1,050 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கைலாசநாதா் கோயிலை சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

கீழையூரில் சுமாா் 1,050 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கைலாசநாதா் கோயிலை சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீழையூரில் பஞ்சபாண்டவா்கள் வனவாசத்தில் இருந்தபோது தா்மா் வழிபட்ட தலமான கைலாசநாதா் கோயில் உள்ளது. யவனா்கள் தங்கி வணிகம் செய்ததற்கான சான்று கல்வெட்டில் உள்ளதாகவும் தமிழகத்தில் உள்ள மூன்று கைலாசநாதா் கல்வெட்டு கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

சுமாா் 1,050 ஆண்டுகள் பழைமையான இக்கோயில் மிகவும் சிதிலடைந்து உள்ளே யாரும் சென்று பூஜை செய்ய முடியாத நிலையில் இருந்தது.

கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று ஜோலாா்பேட்டை திரு ஆரூரான் உழவாரத் திருப்பணி அறக்கட்டளை குழுவைச் சோ்ந்த 60 சிவனடியாா்கள் உழவாரப் பணி வாயிலாக மரங்களை வெட்டி, முட்புதா்களை நீக்கி உள்ளே சென்று பூஜை செய்யும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனா்.

இக்கோயிலில் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இக்கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com