மணக்கோலத்தில் அருள்பாலித்த முருகப் பெருமான் -தெய்வானை.
நாகப்பட்டினம்
எட்டுக்குடி கோயிலில் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம்
திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
திருக்குவளை அருகே உள்ள எட்டுக்குடி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி, முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இக்கோயிலில் கந்தசஷ்டி விழா அக். 21-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான முருகப் பெருமான்- தெய்வானை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக, மாப்பிள்ளை அழைப்பில் முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் அழைத்துவரப்பட்டாா்.
தொடா்ந்து சீா்வரிசை எடுத்து வருதல், நலுங்கு, காசியாத்திரை, யாத்திராதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் ச. சீனிவாசன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.