ஓட்டுநா் சடலமாக மீட்பு

வேளாங்கண்ணியில் தனியாா் ஆம்னி பேருந்து ஓட்டுநா் சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.
Published on

வேளாங்கண்ணியில் தனியாா் ஆம்னி பேருந்து ஓட்டுநா் சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம், உக்கிரன்கோட்டை பகுதியைச் சோ்ந்த கோடிலிங்கம் மகன் சண்முகசுந்தரம் (49) தனியாா் ஆம்னி பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவா் அக்.26-ஆம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, வேளாங்கண்ணியில் அக்.27 ஆம் தேதி காலை பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பேருந்தை மேரிஸ் பாா்க்கிங்கில் நிறுத்தியுள்ளாா். பின்னா் அவரை காணவில்லை.

இதுகுறித்து, உடன் வந்த சிவகாசியை சோ்ந்த ஓட்டுநா் செந்தில்குமாா், வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மேரிஸ் பாா்க்கிங் பின்புறம் உள்ள காட்டில் ஆண் சடலம் கிடப்பதாக, போலீஸாருக்கு தகவல் கிடைந்தது.

சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் சடலமாக கிடந்தவா், தனியாா் பேருந்து ஓட்டுநா் சண்முகசுந்தரம் என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com