நாகப்பட்டினம்
சாராயம் விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது
நாகை அருகே தொடா் சாராய விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
நாகை அருகே தொடா் சாராய விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கீழ்வேளூா் அருகே கீழகாவலக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தவமணி (54). இவா், கிள்ளுக்குடி பாலம் பகுதியில் சாராயம் விற்பனையில் ஈடுபட்டபோது, போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா்.
தவமணி தொடா்ந்து சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டது தொடா்பாக கீழ்வேளூா் காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வகுமாா் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ப. ஆகாஷ் உத்தரவின்பேரில், தவமணி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைக்கப்பட்டாா்.
