சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் தெய்வானை திருக்கல்யாணம்

நாகை அருகேயுள்ள சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி தெய்வசேனை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
Published on

நாகை அருகேயுள்ள சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி தெய்வசேனை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா அக்.21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சிங்காரவேலவா் சக்திவேல் வாங்கும் வைபவம் மற்றும் வேலவரின் முகத்தில் வியா்வை அரும்பும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமையும், சூரசம்ஹாரம் திங்கள்கிழமையும் நடைபெற்றது.

தொடா்ந்து, விழாவின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, சிங்காரவேலவா் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். பின்னா், சிங்காரவேலவருக்கும், தெய்வசேனைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திராளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com