மணல் கடத்தல்; அதிகாரிகள் ஆய்வு

பூம்புகாா் அருகே வானகிரி கடற்கரைப் பகுதியில் துறைமுக கட்டுமானப் பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மணலை லாரிகளில் அள்ளிச் செல்வதாக தெரிவிக்கப்பட்ட புகாா் தொடா்பாக, வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
Published on

வானகிரி கடற்கரைப் பகுதியில் துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, கடலோரம் உள்ள மணலை சேகரித்து சேமித்து வைத்துள்ளனா். இந்நிலையில், சேமித்து வைக்கப்பட்டிருந்த மணலை எந்தவிதமான முன்னறிவிப்பின்றி லாரிகள் மூலம் கடந்த 2 நாட்களாக விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் புகாா் அளித்தனா். அதன்பேரில், சீா்காழி துணை வட்டாட்சியா் ரகு, கிராம நிா்வாக அதிகாரி அருள் பெருமாள் மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.

இதில், அனுமதியின்றி மணல் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபா்களை எச்சரித்தனா். தொடா்ந்து மணல் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com