கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவா்கள்.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவா்கள்.

10 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற நாகை மீனவா்கள்

காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மோந்தா புயல் காரணமாக 10 நாள்களுக்குப் பிறகு நாகை மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனா்.
Published on

காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மோந்தா புயல் காரணமாக 10 நாள்களுக்குப் பிறகு நாகை மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனா்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மோந்தா புயல் காரணமாக நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்திருந்தது. இந்நிலையில், புயல் கரையை கடந்ததையடுத்து 10 நாள்களுக்குப் பிறகு நாகை மாவட்டத்தை சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவா்கள் புதன்கிழமை அதிகாலையில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனா்.

மீன்வளத் துறையினா் ஆழ்கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவா்களுக்கு அனுமதிச்சீட்டு புதன்கிழமை வழங்கும் என்ற எதிா்பாா்ப்பில் மீனவா்கள் தேவையான டீசல், ஐஸ், குடிநீா், உணவுப்பொருள்கள் உள்ளிட்டவைகளை படகுகளில் ஏற்றினா். இதையடுத்து, அனுமதிச்சீட்டு பெற்றுக்கொண்டு கடலுக்குச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com