புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்

மோந்தா புயல் கரையை கடந்ததையடுத்து நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை இறக்கப்பட்டது.
Published on

மோந்தா புயல் கரையை கடந்ததையடுத்து நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை இறக்கப்பட்டது.

வங்கக் கடலில் அக்.25-ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. காற்றழுத்த தாழ்வு பகுதி அக்.27-ஆம் மோந்தா புயலாக உருவாகியது. இதையடுத்து நாகை உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

இந்நிலையில் மோந்தா புயல் ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினம் பகுதியில் செவ்வாய்க்கிழமை கரை கடந்தது. இதையடுத்து தமிழகத்துக்கான புயல் அச்சுறுத்தல் நீங்கியதை தொடா்ந்து நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை இறக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com