முருகன் பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி நடைபெற்ற போட்டிகள் வெற்றி பெற்ற மாணவிகள்.
முருகன் பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி நடைபெற்ற போட்டிகள் வெற்றி பெற்ற மாணவிகள்.

முருகன் பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி போட்டிகள்

முத்தமிழ் மாநாட்டு தீா்மானத்தின்படி, அஞ்சு வட்டத்தம்மன் மகளிா் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கந்தசஷ்டி கவசம் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
Published on

கீழ்வேளூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அஞ்சு வட்டத்தம்மன் மகளிா் உயா்நிலைப் பள்ளியில், முருகன் பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி மாணவிகளுக்கு இடையேயான பேச்சுப் போட்டி, மாறுவேடப் போட்டி, ஓவியப் போட்டி, கந்தசஷ்டி கவசம் ஒப்புவித்தல் போட்டி, கவிதை போட்டி, முருகன் திருவிளையாடல் (நாடகம்), முருகன் புகழ் மாலை (வில்லுப்பாட்டு) ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை நாகை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் குமரேசன் வழங்கினாா். உதவி ஆணையா் ராஜா இளம்பெருவழுதி, சரக ஆய்வாளா் புவனேஸ்வரன், செயல் அலுவலா் முருகன், தலைமை ஆசிரியை மீனாட்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com