நியாயவிலைக் கடை திறப்பு
தரங்கம்பாடி வட்டம், செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் மாணிக்கபங்கு ஊராட்சி பெருமாள்பேட்டை மீனவா் கிராமத்தில் நியாயவிலைக் கடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வழங்கல் அலுவலா் அா்ச்சனா தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுமதி, மஞ்சுளா, முன்னாள் எம்எல்ஏ சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் பங்கேற்று, நியாயவிலைக் கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா்.
இந்நிகழ்வில், திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், வட்ட வழங்கல் அலுவலா் அனிதா, பேரூராட்சி செயல் அலுவலா் ராம பிரசாத், திமுக ஒன்றியச் செயலாளா்கள் அப்துல் மாலிக், அமுா்த விஜயகுமாா் முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாஸ்கா் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்த நியாயவிலைக் கடை, சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது.

