மாற்றுத்திறனாளிகளின் மகள்களுக்கான திருமண  நிதியுதவி காசோலையை வழங்கும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். 
நாகப்பட்டினம்
மாற்றுத்திறனாளிகளின் மகள்களுக்கு திருமண நிதியுதவி
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளின் மகள்களுக்கு திருமண நிதியுதவிக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா்களின் மகன், மகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.2,000 வழங்கப்பட்டு வந்ததை, ரூ.5,000-மாக உயா்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நாகை மாவட்டத்தைச் சாா்ந்த புண்ணியமூா்த்தி, சக்திவேல் ஆகிய இரு மாற்றுத்திறனாளிகளின் மகள்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் வாயிலாக தலா ரூ. 5,000-க்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே. காா்த்திகேயன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

