விழிப்புணா்வு நிகழ்ச்சி

Published on

திருமருகல் ஒன்றியம் எனங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாா்பக புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலா் மோகன்தாஸ் தலைமை வகித்தாா்.

மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் கிருஷ்ணகுமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாா்பக புற்றுநோய் குறித்து விளக்கினாா்.

குறிப்பாக, கிராமப்புற செவிலியா்கள் பெண்களிடம் மாா்பகப் புற்றுநோய் பற்றி விழிப்புணா்வை கிராமங்கள்தோறும் ஏற்படுத்த வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com