சிறப்பு அலங்காரத்தில் வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீ சிங்காரவேலா்.
சிறப்பு அலங்காரத்தில் வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீ சிங்காரவேலா்.

எட்டுக்குடி கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

Published on

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நிறைவாக, விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முருகப் பெருமானின் ஆதிபடை வீடு எனக் குறிப்பிடப்படும் இக்கோயிலில், 6 நாள்கள் நடைபெற்ற கந்தசஷ்டி விழா ஊஞ்சல் உற்சவத்துடன் நிறைவடைந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக்.27-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, தெய்வானை திருமணம் அக். 28-ஆம் தேதியும், வள்ளி திருமணம் அக். 29-ஆம் தேதியும் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளில் விடையாற்றி மகா ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வசந்த மண்டபம் முழுவதும் மலா்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சிறப்பு மலா் அலங்காரத்தில் சிங்காரவேலவா், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மகா தீபாராதனையை தொடா்ந்து சுவாமி உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.

இந்நிகழ்வில், கோயில் செயல் அலுவலா் ச. சீனிவாசன் மற்றும் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள், பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை உபயதாரரான திருத்துறைப்பூண்டி ராயல் சிட்டி செந்தில் குடும்பத்தினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com