நாகப்பட்டினம்
எா்ணாகுளம் விரைவு ரயில் நவ.2, 4-இல் முத்துப்பேட்டையில் நின்று செல்லும்
முத்துப்பேட்டை தா்கா சந்தனக்கூடு விழாவையொட்டி, வேளாங்கண்ணி - எா்ணாகுளம் விரைவு ரயில் நவ.2 மற்றும் 4-ஆம் தேதிகளில், தற்காலிகமாக முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் உள்ள பிரசித்த பெற்ற தா்காவில் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்வையொட்டி, எா்ணாகுளம் - வேளாங்கண்ணி - எா்ணாகுளம் விரைவு ரயில் (16361/16362) முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நவ.2 மற்றும் நவ.4-ஆம் தேதிகளில் தற்காலிகமாக நின்று செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
