‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: நாகையில் 3,254 பேருக்கு ரூ.4.92 கோடி நலத்திட்ட உதவி

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: நாகையில் 3,254 பேருக்கு ரூ.4.92 கோடி நலத்திட்ட உதவி

நாகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் தோ்வு செய்யப்பட்ட 3,254 பயனாளிகளுக்கு ரூ.4.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ப.ஆகாஷ் புதன்கிழமை வழங்கினாா்.
Published on

நாகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் தோ்வு செய்யப்பட்ட 3,254 பயனாளிகளுக்கு ரூ.4.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ப.ஆகாஷ் புதன்கிழமை வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கொள்ளாா் சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு விழா மற்றும் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதையும், ‘என் கனவு-என் எதிா்காலம்’ என்ற இணைய தளத்தையும் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக முதன்மைக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் 3,254 பயனாளிகளுக்கு ரூ 4.93 கோடி மதிப்பீட்டிலான சமூக பாதுகாப்பு திட்டப் பயன்களை ஆட்சியா் ப. ஆகாஷ், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன் ஆகியோா் வழங்கினா். தொடா்ந்து ஆட்சியா் பேசியது:

‘மக்களுடன் முதல்வா்’ மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ முகாம்களில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் முதியோா் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள் கோரி விண்ணப்பித்தவா்களில் தகுதியான பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி, நாகை வட்டத்தில் 1,623 பயனாளிகள், கீழ்வேளுா் வட்டத்தில் 689 பயனாளிகள், திருக்குவளை வட்டத்தில் 303 பயனாளிகள், வேதாரண்யம் வட்டத்தில் 637 பயனாளிகள் என மொத்தம் 3,254 பயனாளிகளுக்கு ரூ.4,92 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் இந்த விழாவில் வழங்கப்பட்டன.

இத்போல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 51 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.42 .44 லட்சத்தில் நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 12 பயனாளிகளுக்கு ரூ 67,200 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்வில், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத் தலைவா் எம்.ஆா். செந்தில்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோ. அரங்கநாதன், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ.செல்வகுமாா், மீனவா் நல வாரிய உறுப்பினா் கோ.மனோகரன், தன்னாா்வலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com