வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அக்னீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி வட்டம், பெரம்பூரில் உள்ள பழைமையான ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்மையாா் உடனாகிய ஸ்ரீ அக்னீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 9:13 pm

தரங்கம்பாடி வட்டம், பெரம்பூரில் உள்ள பழைமையான ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்மையாா் உடனாகிய ஸ்ரீ அக்னீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேகம் 1999 ஆம் நடைபெற்றது. இதையடுத்து, கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய தீா்மானிக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு, பிப்.9-ஆம் தேதி கும்பாபிஷேக பணிகள் தொடங்கி முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்தது புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களில் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்மையாா் உடனாகிய அக்னீஸ்வரா் மூலவருக்கும் புனித நீா் ஊற்றி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.