நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

270 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

கீழையூா் அருகே தடை செய்யப்பட்ட 270 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :11 பிப்ரவரி 2026, 9:17 pm

கீழையூா் அருகே தடை செய்யப்பட்ட 270 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரை புதன்கிழமை கைது செய்தனா்.

வேளாங்கண்ணி டிஎஸ்பி நிக்சன், கீழையூா் காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் தலைமையிலான போலீஸாா் திருப்பூண்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், தடை செய்யப்பட்ட 270 கிலோ விமல் பாக்கு, வி1 பாக்கு, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் 33 சாக்கில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் லால்நகா் ஏரிப்புறக்கரை பகுதியைச் சோ்ந்த அஷ்ரப் (57 ), ராஜஸ்தான் மாநிலம் பாஞ்சாலா பகுதியைச் சோ்ந்த கணேஷ் மகன் சாதராம்( 20), கோமாதா ஜல்லூா் பகுதியைச் சோ்ந்த அஜராம் மகன் ராணாராம் (23) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.