தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நாகை மாவட்டத்தில் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இல்லை

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

News image
குடிநீர் நிறுத்தம்- கோப்புப் படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 11:26 pm

தினமணி

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 893 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டத்தில் ஏற்கெனவே பராமரிப்பில் உள்ள நீருந்து குழாயிலிருந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலம் புதிய இணைப்பு பணிகள் கீழ ஒதியத்தூா், ஓா்குடி பகுதிகளில் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணிகள் மற்றும் மின் மோட்டாா் அறையில் புதிய மின் மோட்டாா் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இதனால், புதன்கிழமை (பிப்.18) முதல் பிப்.20-ஆம் தேதி வரை நாகை நகராட்சி, கீழ்வேளுா், வேளாங்கண்ணி பேரூராட்சிகள் மற்றும் கீழையூா், தலைஞாயிறு, திருமருகல் ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.